இந்த “லோக்பால்” – ஐ எப்பதாம்பா அமைப்பீங்க?: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவது குறித்து 10 நாட்களில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை விசாரிப்பதற்கான லோக்பால் என்ற நடுவர் அமைப்பை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு இதுவரை லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. 

இதனை விசாரித்த நீதிபதிகள்  “நீதிமன்றம் உத்தரவிட்டும் இது வரை லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். “மத்திய அரசு விரைந்து லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் லோக்பால் அமைப்பதற்கான காலக்கெடு குறித்து 10 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.