ஐடியா செல்லுலார் பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.
ஐடியா செல்லுலார் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.295 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
அன்லிமிட்டெட் அழைப்புகளின் படி தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடியாவின் ரூ.295 சலுகை ஏர்டெல் வழங்கி வரும் ரூ.299 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.251 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் ஐடியா அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சலுகையின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 100 வெவ்வேறு எண்களுக்கு மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இதனால் 100 எண்களை கடந்து அழைப்புகளை மேற்கொள்ளும் போது அழைப்பு கட்டணம் நொடிக்கு ரூ.1 பைசா வீதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 5 ஜிபி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா கட்டணமாக 10 கே.பி.-க்கு 4 பைசா வசூலிக்கப்படுகிறது. ரூ.295 ஐடியா சலுகை நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் 4ஜி வட்டாரங்களில் வழங்கப்படுகிறது.
புதிய ஐடியா சலுகையை பயனர்கள் மைஐடியா ஆப் அல்லது ஐடியா வலைதளம் சென்று ரீசார்ஜ் செய்ய முடியும்.
ஐடியாவின் ரூ.295 சலுகை ஏர்டெல் ரூ.299 மற்றும் ஜியோ ரூ.251 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
ஏர்டெல் ரூ.299 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இதில் டேட்டா வழங்கப்படவில்லை.
ஜியோ வழங்கும் ரூ.251 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் ஜியோ சலுகையில் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுவதில்லை.