காவிரியில் 2 லட்சம் கன அடி நீர் வருகை : கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை..


கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ், கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் காவிரியில் சுமார் 2 லட்சம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலை அடைந்தது.

தமிழகத்திற்கு காவிரி நீர்வரத்து:

ஆகஸ்ட் 10, மாலை 5 மணி: 1 லட்சம் கன அடி
ஆகஸ்ட் 11, காலை 8 மணி: 1.25 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 11, மதியம் 2 மணி: 1.35 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 11, இரவு 8 மணி: 1.40 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 12, காலை 6 மணி: 1.27 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 13, காலை 6 மணி: 1.10 லட்சம் கன அடி

ஆகஸ்ட் 13, மாலை 5 மணி: 90,000 கன அடி

ஆகஸ்ட் 14, காலை 8 மணி: 80,000 கன அடி

ஆகஸ்ட் 14, மதியம் 3 மணி: 95,000 கன அடி

ஆகஸ்ட் 15, மதியம் 3 மணி: 1.90 லட்சம் கன அடி

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடர் மழைப்பொழிவை அளித்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கலுக்கு தற்போது சுமார் 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக தமிழகக் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி பாயும் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.

ஒகேனக்கலில் 39வது நாளாக குளிக்க தொடர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல் இயக்கவும் 7வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று கும்பாபிஷேகம்..

கேரளாவில் கனமழை : கொச்சி விமான நிலையம் மூடல்..

Recent Posts