திரைப்பட நடிகர் விஜயகுமார், தனது வீட்டை அபகரித்துவிட்டதாக அவரது மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு, திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மகள் வனிதா, சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்திருந்தார்.
படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து வீட்டை காலி செய்யாமல் பிரச்சனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததையடுத்து, வனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தச் சென்றனர்.
அப்போது, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.