இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் டெல்லியில் சந்தித்து பேசினர். பின் இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இரு தலைவர்களும் டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
ஆசிரியர்கள் பெற்றோர்கள் குழந்தைகள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தான் சரியான பாதையை காட்டுகினறனர்.
ரஷ்ய அதிபருடன் வலிமையான நட்புறவை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். ரஷ்யாவில் குழந்தைகளுடன் புடின் கலந்துரையாடுவார். அறிவியல் வளர்ச்சிக்கு அவர் உறுதிபூண்டுள்ளார்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நானும், புடினும் அக்கறை கொண்டுள்ளோம்.குழந்தைகளே நாட்டின் எதிர்காலம். குழந்தைகளுக்கு அறிவியல் வளர்ச்சி பற்றி தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்ய அதிபர் கூறுகையில், அறிவியல், மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் பிரிவாக உள்ளது. அறிவியலில் உள்ள வளர்ச்சி என்னை பெரிதும் கவர்ந்தது.
இன்றைய நாள் இந்தியா ரஷ்யா இடையிலான உறவில் முக்கிய நாளாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, இரு நாடுகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவது ஒப்பந்தத்திற்கு இந்தியாவும் ரஷ்யாவும் வரவேற்பு தெரிவிக்கின்றன.
ராணுவ தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பிற்கு இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டங்களில் இரு நாடுகளும் முழு திருப்தி தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் அளிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.