வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 649/9 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. கீமோ பால் (13), சேஸ் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இதில் கீமோ பால் 47 ரன்கள் எடுத்தார். சேஸ் 53 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார். லீவிஸ் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. கேப்ரியல் ஒரு ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 181 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் அஷ்வின் 4, முகமது ஷமி 2 விக்கெட் சாய்த்தனர்.

முதல் இன்னிங்சில் 468 ரன்கள் பின் தங்கியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இந்தியா ‘பாலோ ஆன்’ கொடுத்தது. குல்தீப்பின் சுழல் பந்துவீச்சில் ஹோப் 17, ஹெட்மயர் 11 ரன்களில் அவுட்டாகினர். பாவெலை (83) வெளியேற்றிய குல்தீப் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஜடேஜா ‘சுழலில்’ கீமோ பால் (15), லீவிஸ் (4) அவுட்டாகினர். கேப்ரியல் (4) ஏமாற்ற, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இரண்டாவது போட்டி வரும் 12ம் தேதி ஐதராபாத்தில் துவங்குகிறது.

 

5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என பற்றவைத்த பன்வாரிலால் — ஆளுநர் தானே நியமிக்கிறா் என அமைச்சர் பதில்

Recent Posts