5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சட்டீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்போரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

மத்திய பிரதேசம் – 230, ராஜஸ்தான் – 200, சட்டீஸ்கர் – 90, மிசோரம்-40 தொகுதிகளுக்கும் டிச.15 ம் தேதிக்கு முன் ஒரே சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவமும் பயன்படுத்தப்படும். சட்டீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.,23ல் தொடங்கும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி  நாள் அக் – 26. முதல் கட்ட வாக்குப்பதிவு நவ-12. முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். 2ம் கட்டமாக 72 தொகுதிகளுக்கு நவ.20 வாக்குப்பதிவு நடத்தப்படும்.

மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 
ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு  டிசம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

4 states assembly elections announced