விடை பெறுகிறது.. தென் மேற்கு பருவ மழை : நாளை தொடங்குகிறது வட கிழக்கு பருவ மழை..

ஜீன் 1-ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவ மழை இன்றுடன் விடை பெறுகிறது.

கேரளாவை ஆட்டிப்படைத்து,கர்நாடகாவைக் கலங்கவைத்து தமிழகத்தை அச்சப்படுத்தி தற்போது விடை பெறுகிறது.

வடகிழக்கு பருவமழை தென் இந்தியாவில் கொட்டித்தீர்த்தாலும்,பீகார்,மேற்கு வங்கம்,வடகிழக்கு மாநிலங்களில் பற்றாக்குறையாகத்தான் வெளியேறுகிறது.

தமிழகத்தின் ஜீவாதாரமான வடகிழக்க பருவமழைஇன்று அல்லது நாளை தொடங்குதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை இருப்பதாக வானிலை தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலத்தில் மேல் சுழற்சி காரணாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு..

சபரிமலையில் ஐதீகங்களை பின்பற்ற வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

Recent Posts