தமிழகத்தில் போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிப்பதால், அவர்கள் அரசு மருத்துவ மனைகளுக்கு வர தாமதம் ஏற்பட்டு அதனாலேயே பன்றிக் காய்ச்சல், டெங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனால், தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்தி போலி மருத்து வர்களை கைதுசெய்ய சுகாதாரத் துறை இயக்குநர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பன்றிக் காய்ச் சல், டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன.
ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனை களில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் அவர்கள் மரணங்கள் வெளிச் சத்துக்கு வரவில்லை.
மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக வார்டுகள் ஒதுக்கப் பட்டுள்ளன. நேற்று 6 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது போலி ஆய்வகங்கள், போலி மருத்துவர்கள் மற்றும் மருந்துக் கடை களில் பணிபுரிவோர், தங்களிடம் காய்ச் சல் பாதிப்பு எனக் கூறி மருந்து கேட்டு வரும் நோயாளிகளுக்கு என்ன பாதிப்பு எனத் தெரியாமலேயே மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கின்றனர்.
அதனால் அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு குறையாமல் அபாய கட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு செல்கின்ற னர்.
அதனாலேயே டெங்கு, பன்றிக் காய்ச்சல் மரணங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனால், தமிழகம் முழு வதும் போலி மருத்துவர்களை கண்டறிய ரெய்டு நடத்துவதற்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் விஜயலட்சு மியிடம் கேட்டபோது, ‘‘போலி மருத்துவர் கள் பட்டியலைத் தயார் செய்துவிட்டோம்.
ஓரிரு நாளில் ஒரே நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தி அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்றார்.
அரசு ராஜாஜி மருத்துவமனை பன்றிக் காய்ச்சல் வார்டு பொறுப்பாளரும், மருத்து வப் பேராசிரியருமான பாலாஜிநாதன் கூறியதாவது:
பன்றிக் காய்ச்சலை கண்டுபிடிக்க அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டுமே நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம் உள்ளது. நோயாளிகளின் ரத்த மாதிரிகளை இந்த ஆய்வகத்தில் சோதனை செய்த பிறகே, காய்ச்சல் பாதிப்பை பொறுத்து சிகிச்சை அளிக்கிறோம்.
தனியார் ஆய்வகத்தில் வழங்கப்படும் ஆய்வு முடிவுகள் சில நேரங்களில் தவறாகி விடுகின்றன.
மருந்துக் கடைக ளில் பணிபுரியும் ஊழியர்கள், போலி ஆய்வகங்களை நடத்துவோர், போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஊசி, மருந்துகளை வழங்கி சிகிச்சை அளிக் கின்றனர்.
நோயாளிகளிடமும் போதிய விழிப்புணர்வு இன்றி அவர்களிடம் சிகிச்சைக்கு செல்கின்றனர்.
பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி தெரிந்த உடனேயே, அரசு மருத்துவ மனைகளுக்கு சிகிச்சைக்கு வந்தால் அவர்களை காப்பாற்றி விடலாம்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. பன்றிக் காய்ச்சல் மருந்துகள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதால் நோயாளிகள் அச்சப்பட தேவையில்லை.
ஆனால், தாமதமாக வந்தால் சிக்கல்தான். இவ்வாறு அவர் கூறினார்.