மக்களவை தேர்தல் : பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக இடையே உடன்பாடு..

2019-ஆம் ஆண்டு மே மாதம் பீகாரில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் சரிசமமாக பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லியில் நடந்த கலந்துரையாடலுக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இந்த தொகுதிப் பங்கீடு குறித்து விளக்கமளித்தனர்.

அதில் பீகாரில் நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் சரிசமமான எண்ணிக்கையில் பிரித்து போட்டியிடும் என்றும் ,

கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி மற்றும் லோக் சம்தா ஆகிய கட்சிகளுக்கு விரைவில் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். முன்னதாக பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியின் போது தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

பத்திரிகையாளரின் மரண மர்மம் : சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்க ஜெர்மனி மறுப்பு..

Recent Posts