என் தாயை அனுமதிக்காத கடவுள், கடவுளே இல்லை : நடிகர் பிரகாஷ் ராஜ்…

சபரிமலை குறித்து உரையாற்றுகையில் என் தாயை அனுமதிக்காத கடவுள், கடவுளே இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

அனைத்து வயது பெண்களையும் கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலினுள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்தது.

அதை நிறைவேற்ற விடாமல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் தங்களின் அரசியல் லாபத்திற்காக சபரிமலை பகுதியில் போராட்டம் நடத்துவது, பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வது என அராஜகபோக்குடன் நடந்து வருகின்றன.

பா.ஜ.கவின் இத்த்கைய செயல்பாட்டிற்கு கடும் எதிர்ப்புகள் பலதரப்பில் எழுந்து வருகின்றன.

இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் சபரிமலை குறித்து அவர் இன்று பேசியபோது :

” இந்த உலகில் எந்தவொரு மனிதனும் ஒரு தாயினாலேயே பிறப்பை அடைகிறான். இந்த பூமியை தாய் பூமி என்று அழைக்கிறோம்.

எந்தவொரு மதம் பெண்கள் வழிபாடு செய்வதை தடுக்கிறதோ, என்னை பொறுத்தவரையில் அது மதமே இல்லை.

எந்த கடவுள் என் தாயை வழிபாடு செய்யவதை விரும்பவில்லையோ அது என்னை பொறுத்தவரையில் கடவுளே இல்லை.” இவ்வாறு அவர் உரையாற்றினார்.

நன்றி

தீக்கதிர்

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். அரிஹாந்த் வெள்ளோட்டம் : பிரதமர் மோடி வாழ்த்து

தீபாவளித் திருநாள் : தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்..

Recent Posts