தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் தென்னை விவசாயி தற்கொலை…

கஜா புயலால் தனது 5 ஏக்கா் தென்னை மரங்கள் சேதமடைந்த நிலையில் விவசாயி சுந்தா் ராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்டுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 15ம் தேதி இரவு கஜா புயல் கரையை கடந்த நிலையில் நாகை, புதுக்கோட்டை,  தஞ்சாவூா்  உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளன. மேலும் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருவாரியான அளவில் நடைபெற்று வந்த தென்னை விவசாயம் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது.

இதனைத் தொடா்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள நிவாரணத் தொகையில், தென்னை விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு தலா ரூபாய் ஆயிரத்து 100 இழப்பீடாக வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை மரங்கள் அனைத்தும் சாய்ந்ததால் தென்னை விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனா்.

இந்நிலையில் தஞ்சை ஒரத்தநாடு அருகே சோழன் குடிகாடு கிராமத்தைச் சோ்ந்த சுந்தா் ராஜ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வந்தாா்.

புயல் காரணமாக 5 ஏக்கரில் நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் முற்றிலுமாக சாய்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனால் விவசாயி சுந்தா் ராஜ் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளாா். இந்நிலையில் இன்று காலை சுந்தர் ராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

 

கஜா புயல் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

புயல் பாதிப்பை வைத்து திமுக அரசியல் செய்கிறதா? : மு.க.ஸ்டாலின் மறுப்பு

Recent Posts