உத்தரப்பிரதேசத்தில் மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து உத்தரவு..

உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த மாநில அரசு ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவு ஒன்று அனுப்பி உள்ளது.

அதில், வருகிற ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகள் நடைபெற உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்க வருவோர் தங்க இடம் தேவை என்பதால், ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு : டிச.,26 ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்..

Recent Posts