தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு..

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் “ப்ரோட்டான் தெரபி சென்டரை” துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

2020ல் இந்தியா வளமான நாடாக மாறி விடும், ஆனால் நலமான நாடாக இருக்குமா என்றால் கேள்விக்குறியாக இருக்கிறது.

மருத்துவ துறையில் தனியாரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் நம்முடைய கலாச்சார முறைகளை பின்பற்ற வேண்டும்.

நம்முடைய பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது.

செட்டிநாடு சிக்கனுக்கு இணையான அசைவ உணவு உலகில் வேறு எங்கும் இல்லை. மோர்க்குழம்பின் சுவை வேறு எந்த உணவுக்கும் இல்லை.

இடியாப்பம், ஆப்பம் போன்ற ருசியான உணவு வகைகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.

உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமானது. இட்லி, சாம்பார், வடை, இடியாப்பம் போன்றவை மிகச்சிறந்த உணவுகள் என கூறினார்.

சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்: புகழேந்தியிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை..

முதல்வர் எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்..

Recent Posts