காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழைகளுக்கு வாக்குறுதி ஒன்று அளித்து உள்ளார்.
அதில் 2019-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளின் குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும்.
இந்தியாவில் பசியுடன் உறங்குபவர்கள் யாரும் இல்லை என்ற நிலை வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராகுல்காந்தி கருத்து குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பு ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை கொண்டு வரும்.
2004 முதல் 2014-ல் 140 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டனர். இப்போது வறுமையை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க முயற்சி எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
140 million people were lifted out of poverty between 2004 and 2014. Now we should make a determined effort to wipe out poverty in India.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 28, 2019
The poor of India have the first charge on the resources of the country. Congress will find the resources to implement the promise of Rahul Gandhi.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 28, 2019