வரலாறு காணாத கனமழையால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
அந்த மாநிலத்தின் டவுன்ஸ்வில்லே நகரத்தில் கடந்த ஏழு நாட்களில் 100 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
குடியிருப்புகள், சாலைகள் மற்றும் விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீராகக் காட்சி அளிக்கிறது.
சாலையில் சிலர் படகுப் பயணம் செய்கின்றனர்.ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராஸ் ஆற்று அணையானது முழு கொள்ளவை எட்டி விட்டதால் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால்,
பள்ளிகளுக்கு திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது