தமிழகத்தின் பாஜக வேட்பாளர் பட்டியல் பட்டியலை இன்று இரவிற்குள் அல்லது நாளை காலை வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பாஜக சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டு டெல்லி சென்று உள்ளது தமிழக பாஜக வினர்.
அதன் படி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் பாஜக மத்திய தேர்தல் குழுவிடம் இந்த பட்டியலை டெல்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைமை கழகத்தில் இன்று மாலை சமர்ப்பித்து உள்ளனர்.
அதே சமயத்தில், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழத்தில் பாஜகவிற்காக ஒதுக்கி உள்ள 5 தொகுதியில் எந்த தொகுதியில் யார் போட்டி இடுவார்கள் என்பதை உறுதி செய்ய உள்ளது.
குறிப்பாக, ராமநாதபுரம் தொகுதியில் யாருக்கு சீட் கிடைக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது.
காரணம் தமிழக பாஜக இளைஞரணிகு ஒரு சீட் கொடுங்கள் என்று ஏற்கனவே தமிழக தலைமையிடம் கேட்டு உள்ளதாம்.
அதனால் தான் இறுதி பட்டியல் விவகாரம் டெல்லி வரை சென்று உள்ளது என அறைகூவல் வருகிறது.
ஆக மொத்தத்தில் இன்று இரவுக்குள் பாஜக போட்டி இடும் அந்த 5 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்துவிடுமாம்
பாஜக தலைமை. ஏசியாநெட்டிற்கு கிடைத்த தகவல் படி இன்று இரவு அல்லது நாளை காலை பாஜக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.