காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

காரைக்காலில் வரலாற்று புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் முன் இறைவன் தோன்றி  “அம்மையே” என்று அழைத்த தலமான கைலாசநாதர் கோயிலின்

பங்குனித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரேட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தது.

திருத்தேரில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் வீற்றிருந்து அருள்பாலித்தனர். திருத்தேருடன் அம்பாள் விநாயகர்,சுப்பிரமணியர் உள்ளபட பரிகார தெய்வங்கள் சப்பரத்தில் வலம் வந்தன.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்,பெண் வேறுபாடின்றி தேரை இழுத்தனர். விழாவை மாவட்ட நிர்வாகமும், கைலாசநாதர் கோயில் அறக்கட்டளையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தன.

அணு உலைகள் இல்லா தமிழகம் : சுற்றுச்சூழலை முன்னிறுத்தி மதிமுக தேர்தல் வாக்குறுதி

திருமாவளவனுக்கு பானை சின்னம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு..

Recent Posts