தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி உணவகங்கள், கடைகள் மூடப்படும்..

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்களும், கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மார்ச் 22ம் தேதி சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி அனைத்துக் கடைகளும் மூடப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது. மேலும், உணவகங்களும் அன்றைய தினம் மூடப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் மார்ச் 22ம் தேதியன்று கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்படும் என விக்ரமராஜா அறிவித்துள்ளார்.

மேலும், தனியார் பால் நிறுவனங்கள், ஞாயிற்றுக் கிழமை பால் விநியோகத்தை செய்ய முடியாது என்றும் அறிவித்துவிட்டன.

முதல்வர் பதவியில் இருந்து கமல்நாத் ராஜினாமா …

மார்ச் 22-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் பால் விற்பனை இல்லை: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு..

Recent Posts