கரோனா பாதிப்பால் பொது ஊரடங்கு தொடரும் நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து புலம் பெயர்ந்து வருகின்றனர்.
போதிய பேருந்து ரயில் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் பல லட்சக்கணக்கான மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்கின்றனர்.
அவர்களுக்கு போதிய உணவு வசதி கூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேச தொழிலாளர்களுக்கு பேருந்து ஏற்பாடு செய்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.