இந்தியாவில் நேற்று (ஜூன் 24) ஒரே நாளில் 16,922 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.7 லட்சமாக அதிகரித்தது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14,894 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 16,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது.
அதில், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 71 ஆயிரத்து 697 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா வைரசால் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில வாரியாக கரோனா தொற்று பாதிப்பு விபரம்.
மஹாராஷ்டிரா – 1,42,900 – 6,739
டில்லி – 70,390 – 2,365
தமிழகம் -67,468 – 866
குஜராத்-28,943 -1,735
உ.பி.,-19,557-596
ராஜஸ்தான்-16,009-375
மேற்கு வங்கம்- 15,173-591
ம.பி.,-12,448-534
ஹரியானா-12,010-188
தெலுங்கானா-10,444-225
ஆந்திரா 10,331-124
கர்நாடகா-10,118- 164
பீஹார்-8,209-57
காஷ்மீர்-6,422-88
அசாம்-6,198-09
ஒடிசா-5,752-17
பஞ்சாப் 4,627-113
கேரளா-3,603-22
உத்தர்காண்ட்-2,633-35
சத்தீஸ்கர்-2,419-12
ஜார்க்கண்ட்-2,207-11
திரிபுரா-1,259-01
மணிப்பூர்-970-0
கோவா-951-2
லடாக்-941-01
ஹிமாச்சல பிரதேசம்-806-08
புதுச்சேரி461 -09
சண்டிகர்-420-06
நாகலாந்து-347-0
அருணாச்சல பிரதேசம் – 158- 0
மிசோரம்-142-0
தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் டியூ – 120-0