ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படடுள்ளதாக தமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார்.
திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து கு.க.செல்வம் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால்,அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீங்கி வைக்கப்படுகிறார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.