மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்த்த கனமழை : 44 பேர் உயிரிழப்பு..

மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்துவருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவருவதால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இன்று காலை பெய்த கனமழை காரணமாக ரெய்காட் மாவட்டத்தில் மலாய் மற்றும் தலாய் கிராமங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். சதாரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் 8 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேரை காணவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்ட அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்த குழுக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான உதவிகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

வான்வெளியையே வண்ணமயமாக்கிய ஒளிக்கோலங்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது #Tokyo2020 #Olympics!

” வரும் உள்ளாட்சித் தேர்தலை திமுகவுடன் இணைந்து சந்திப்போம்” : மா.கம்யூ மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்..

Recent Posts