நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். பேரவையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
நீட் விலக்கு மசோதா குறித்து முதல்வர் அவையில் பேசும் போது..
நீட் தேர்வு ஒரு பலிபீடம்.சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பியுள்ளது நீட் தேர்வு என்றார்
கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக கூடியிருக்கிறோம் என சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். எனது பொதுவாழ்வில் மறக்க முடியாத நாளாக இது உள்ளது என கூறினார். 100 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளம் போட்டது இந்த சட்டமன்றம் என தெரிவித்தார். அகில இந்திய அளவில் மண்டல கமிஷன் அறிக்கையை செயல்பட வைத்தது இந்த சட்டமன்றம் என பேசினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அளித்தது இந்த சட்டமன்றம் என கூறினார்.
நீட் என்ற சமூக அநீதியை அகற்ற சட்டமன்றத்தால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பேசிக் கொண்டுருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு சமூகநீதியை நிலைநாட்டிட கூடியிருக்கிறோம் என கூறினார். நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கிய தேர்வு முறை அல்ல எனவும் தெரிவித்தார். 69% இடஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல்முறையாக செயல்படுத்தி சாதனைப்படுத்தியது இந்த சட்டம் தான் என கூறினார்.
2010-ம் ஆண்டு தேர்வு முறை முன்மொழியப்பட்ட போதே திமுக கடுமையாக எதிர்த்தது என சிறப்பு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வை அமல்படுத்தியது பாஜக அரசு தான் என கூறினார். நீட் தேர்வு என்பதை விட அது மாணவர்களை கொல்லும் பலி பீடம் என்றே சொல்ல வேண்டும் என தெரிவித்தார். சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? என கேள்வி எழுப்பினார்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வு வானத்தில் இருந்த குதித்துவிடவில்லை என கூறினார். பாஜகவை தவிர எஞ்சிய அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல என கூறினார்.
கட்டணம் செலுத்துவப்பவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பது அறிவு தீண்டாமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தகுதி என்ற பெயரில் உள்ள அறிவு தீண்டாமை அகற்றப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பயிற்சி பெற முடியாதவர்கள் நீட் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு சட்டம் நிறைவேற்றினால், ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீண்டும் நிறைவேற்றப்படும் நீட் விளக்கு மசோதாவை தாமதிக்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவார் என நம்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
அந்த கடமையை இனியாவது ஆளுநர் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன், நீங்களும் எதிர்பார்க்கலாம் என பேசினார். நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவுக்கே ஒளி விளக்கை ஏற்றிவைக்கிறோம் எனவும் கூறினார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என இதே சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என கூறினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். பேரவையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நீட் விலக்கு மசோதா நிறைவேறிய பின் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்