35 வருட மயான பாதை பிரச்சனைக்கு தீர்வு: காரைக்குடி வட்டாச்சியர் அதிரடி..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 35 வருடங்களாக மயானத்திற்கு பிரேதத்தை கொண்டு செல்ல வழிப்பாதையில்லாமல் தனியார் வாய்க்காலில் சென்றதால் பிரச்சனை உருவானது. காரைக்குடி வட்டாச்சியர் இரா.மாணிக்கவாசகம் தலையிட்டு மயான பாதையை உடனடியாக தேர்வு செய்து கொடுத்து 35 வருட பிரச்சனைக்கு முடிவுகட்டினார். மயான புதிய பாதைக்கு தார்சாலை ஏற்படுத்தவும் ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

35 வருட கால மயான பாதை பிரச்சினை வட்டாட்சியர் தலையீட்டில் உடனடியாக நடவடிக்கை காரைக்குடி வட்டம், மித்ராவயல் பிர்க்கா, களத்தூர் ஊராட்சி, தட்டாகுடி கிராமத்தில் சண்முகம் (வயது 65) என்பவர் நேற்று இறந்துவிட்டார். அதே ஊரை சேர்ந்த முத்தையா என்பவரின் பட்டா நிலத்தில் உள்ள வாய்க்கால் பாதையில் பிரேதத்தை கொண்டு செல்வது வழக்கம்.
ஒவ்வொரு முறையும் பிரேதத்தை கொண்டு செல்லும் போது பிரச்சினை உருவாகும். வழக்கம்போல இன்றும் பிரச்சினை உருவானது.


காரைக்குடி வட்டாட்சியர் இரா.மாணிக்கவாசகம், சம்பவ இடத்திற்கு சென்று அரசு இடத்தில் பாதையை ஏற்படுத்தி பிரேதத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பஞ்சாயத்து தலைவரிடம் அரசு‌ இடத்தில் உடனடியாக சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், சாக்கோட்டை காவல் ஆய்வாளர் அல்லிராணி, சார் ஆய்வாளர் தினேஷ், ம.து.வட்டாட்சியர் முபாரக் உசேன், வருவாய் ஆய்வாளர் கிஷேந்திரன் உடனிருந்தனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மீண்டும் நிறைவேறியது..

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட பாஜக சௌதாமணியின் முன்ஜாமின் தள்ளுபடி

Recent Posts