சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 2021-2022 கல்வியாண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் 10-ஆம்வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து சாதனை புரிந்துள்ளனர்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி கிருஷ்ணப்பிரியா 97.1 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும்,மாணவர் சாம் நிர்மல்,மாணவி வைரவ ப்ர்த்தீ 94.4 பெற்று இரண்டாம் இடத்தையும்,மாணவி செசிலியா,மாணவர் ரிஜோ கிளாட்வின் 93.6 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களை செட்டிநாடு ப்பளிக் பள்ளியின் தாளாளர் திரு.எஸ்.பி. குமரேசன் அவர்கள் பாராட்டி தம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இதுபோல் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் மாணவர் கயிலை கார்த்திக் 96 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவர் ராகவ்கிருஷ்ணா 95.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவர் செந்தில் பிரபாகர் வேலு மற்றும் மாணவி அபூர்வா 95.4 சதவீதம் மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு பள்ளியின் தாளாளர் திரு எஸ்பி.குமரேசன் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். வெற்றிபெற்ற மாணவர்கள் மேன்மேலும் வாழ்வில் எல்லா நலன்களையும்,வளங்களையும் பெற ஆசிகள் வழங்கினார். பள்ளியின் துணை தாளாளர் திரு.அருண்குமார் அவர்களும், வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.பள்ளி முதல்வர் திருமதி உஷாகுமாரி,துணை முதல்வர் பிரேம சித்ரா மற்றும் ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குத் தெரிவித்தனர்.
இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என பள்ளியின் தாளாளர் தெரித்துள்ளார்.
செய்தி& படங்கள்
சிங்தேவ்