விநாயகர் சதுர்த்தி: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்…

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நாடு முழுவதும்இந்து சமய மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
ஆவணி மாத வளர் பிறையில் வரும் சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து மோதகம்,கொழுக்கட்டை, அவல்பொறி,சுண்டல் வைத்து படையல் செய்து வணங்கி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று காலை முதலே விநாயகர் கோயில்களில் மக்கள் தரிசனம் செய்தனர். புகழ் பெற்ற பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்தவாரி நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. தெருக்கள் தோறும் விதவிதமான வடிவில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம் : காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா :ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்…

Recent Posts