கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம் : காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,06,50,000 மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்ததற்காக “முதலமைச்சருக்கு நன்றி” என்ற பதாகைகளையும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ. 1,000 தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்திகளையும் காண்பித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.