பாஜக-வை கூட்டணியிலிருந்து வெளியேற்றியது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜக தமிழக தலைமை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சித்து வரும் நிலையில் கூட்டணியை முறித்ததோடு இல்லாமல் இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.