ஆப்கானில் பயங்கர நிலநடுக்கம்: 1,000 பேர் உயிரிழப்பு…

ஆப்­கா­னிஸ்­தா­னின் கிழக்கு மாநி­ல­மான பாக்­டி­கா­வில்­தான் மரண எண்­ணிக்கை அதி­கம். அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் மரணமடைந்துவிட்­ட­தாக நேற்று காலை தக­வல்கள் தெரி­வித்­தன. அனைத்துலக நிறுவனங்களின் மனிதாபிமான உதவியை தாங்கள் வரவேற்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார். படம்: ஏஎஃப்பி
ஆப்­கா­னிஸ்­தா­னில் நேற்று அதி­காலை நேரத்­தில் பயங்­கர நில­நடுக்­கம் ஏற்­பட்­ட­தில் குறைந்­த­பட்­சம் 1,000 பேர் மரணமடைந்து­விட்­ட­தாக தலிபான் தரப்பை மேற்கோள்காட்டி பிபிசி தெரிவித்தது.
தொலை­தூர மலை­க்கி­ரா­மங்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­ட­தால் சரி­யான தக­வல்­கள் கிடைக்­க­வில்லை என்­றும் 1,500 பேர் காய­மடைந்து இருப்­ப­தா­க­வும் அது கூறியது.

சூழ்­நி­லை­களை வைத்து பார்க்கை­யில் மரண எண்­ணிக்கை மிக­வும் அதி­க­ரிக்க வாய்ப்பு உள்­ள­தாக அதி­கா­ரி­கள் அச்­சத்­தோடு கவலை தெரி­வித்­த­னர்.

பாகிஸ்­தா­னு­டன் கூடிய எல்லை அருகே இருக்­கும் ஆப்­கா­னிஸ்­தானின் கோஸ்ட் என்ற நக­ரில் இருந்து ஏறக்­கு­றைய 44 கி.மீ. தொலை­வில் நில­ந­டுக்­கம் ஏற்­பட்டது.

நில­ந­டுக்­கம் வலு­வா­ன­தா­க­வும் நீண்டநேரம் நீடித்­த­தா­க­வும் காபூல் நக­ரைச் சேர்ந்த ஒரு­வர் இணை­யத்தளத்­தில் தெரி­வித்­தார்.

வீடு­கள் தரை­மட்­ட­மா­கிக் கிடப்­பதை­யும் உடல்­கள் போர்­வை­யில் போர்த்­தப்­பட்டு இருப்­ப­தை­யும் காட்டும் ஏரா­ள­மான படங்­கள் ஆப்­கா­னிஸ்­தான் ஊட­கத்­தில் வெளி­யி­டப்­பட்­டன.

நில­ந­டுக்­கம் ரிக்­டர் அள­வில் 6.1 அள­வுக்கு இருந்­த­தாக ஐரோப்­பிய மத்­திய தரைக்­க­டல் புவி­யி­யல் நிலை­யம் தெரி­வித்­தது.

ஆப்­கா­னிஸ்­தா­னின் கிழக்கு மாநி­ல­மான பாக்­டி­கா­வில்­தான் மரண எண்­ணிக்கை அதி­கம். அங்கு நூற்றுக்கணக்கில் மக்கள் மரணமடைந்து­விட்­ட­தாக நேற்று காலை தக­வல் தெரி­வித்­தன.

நூற்­றுக்­க­ணக்­கா­னோர் காயம் அடைந்­த­தா­க­வும் உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

அதி­கா­ரி­கள் பெரிய அள­வில் மீட்­புப் பணி­க­ளைத் தொடங்கி உள்ளனர். பல ஹெலி­காப்­டர்­களும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்டுள்ளன.

நில­ந­டுக்­கத்தை பாகிஸ்­தான், ஆப்­கா­னிஸ்­தான், இந்­தி­யா­வில் உள்ள கிட்­டத்­தட்ட 119 மில்­லி­யன் மக்­கள் உணர்ந்­த­தாக டுவிட்­ட­ரில் அந்த ஐரோப்­பிய நிலை­யம் தெரி­வித்­தது.

பாகிஸ்­தா­னில் உட­னடி உயி­ரு­டற் சேதம் பற்­றிய தக­வல் இல்லை.

ஆப்­கா­னிஸ்­தா­னில் கடந்த ஆகஸ்ட் மாதம்­தான் தலி­பான் தரப்பு பொறுப்­பேற்­றுக் கொண்­டது. அந்த நாட்­டில் கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­கடி நில­வு­கிறது. இத்­த­கைய ஒரு சூழ்­நி­லை­யில் பேரி­டர் வேறு நிகழ்ந்­து­விட்­டது.

ஆப்­கா­னிஸ்­தா­னின் வட­மேற்குப் பகு­தி­யில் 2015ல் நில­ந­டுக்­கம் நிகழ்ந்­த­போது அந்த நாட்­டி­லும் பாகிஸ்­தா­னி­லும் நூற்­றுக்­க­ணக்­கான மக்­கள் மரணமடைந்தனர்.