அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லுாரிகளுக்கான ஏப்.,2023 தேர்வு முடிவுகள் வெளியீடு…

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லுாரிகளுக்கு ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அழகப்பா பல்கலைக்கழக தேர்வாணையம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது..
இளங்கலை பாடப்பிரிவுகள் (பி.ஏ,பி.எஸ்.சி,பி.சி.ஏ, முதுகலைப் பாடப் பிரிவுகளின்( எம்.ஏ,எம்.எஸ்.சி,எம்.கா.ம்,எம்.பி.ஏ, தேர்வு முடிவுகள் வெளியடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை www.alagappauniversity.ac.in என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என அழகப்பா பல்கலைக்கழக தேர்வாணையர்(பொ) முனைவர் எ.கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.