அழகப்பா பல்கலை., புதிய துணைவேந்தர் ஜி.ரவி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்..

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரை அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள ஜி.ரவி குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார்.

முன்னதாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.ரவியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தவுடன் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தொலைபேசியில் புதிய துணைவேந்தராக போறுப்பேற்கவுள்ள ஜி.ரவிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜி.ரவி தனது குடும்பத்தினருடன் தவத்திரு பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து ஆசிபெற்றார்.


காரைக்குடி அழகப்பா பல்கலை., இயற்பியல் துறை தலைவர் ஜி. ரவி அழகப்பா பல்கலை கழகத்தில் புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் பேராசிரியர் ராஜேந்திரன் கடந்த 2021 ஜூன் மாதம் இவரின் பதவிக்காலம் முடிவடைந்தது இதனைத் தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை தலைவர் ஜி. ரவி துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார். 22.08.22 அன்று அழகப்பா பல்கலைக்கழகத்தின் 11- வது துணைவேந்தராக பணியாற்றவுள்ளார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்