பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்ததினம்: காரைக்குடியில் அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை..

பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்ததினத்தை முன்னிட்டு காரைக்குடி 2-பீட் அருகே அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான செந்தில் நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோழன் பழனிச்சாமி,நகர செயலாளர் மெய்யப்பன், அதிமுக நிர்வாகிகள் தாகூர், தேவன் உள்பட அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

செய்தி படங்கள்
சிங்தேவ்