பத்துமலையில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்களுடன் வெள்ளிரதம்…

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயற்கை எழில் கொஞ்சும் மலையில் குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கும் பத்துமலை முருகன் கோயிலில் வருடம் தோறும் தைப்பூசத் திருவிழா கோலாகமாக நடைபெறும்.

கடந்த 3 ஆண்டுகளாக கரோனா பெருந் தொற்றால் தடைபட்டிருந்த தைப்பூசத் திருவிழா இந்தாண்டு கோலாகலமாக தொடங்கியது.

நேற்று நள்ளிரவு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோயிலிருந்து வெள்ளிரதத்தில் வள்ளி,தெய்வானை சமேத முருகன் பெருமான் வலம் வந்தார்.

16 கி.மீ வெள்ளிரதம் கோலாலம்பூர் முக்கிய வீதிகள் வழியாக லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்தோடு நடைபணயமாக பத்துமலை வந்தடைந்தனர்.

இன்றும் நாளையும் மத பேதமின்றி தமிழர்களும்,சீனர்களும்,வெள்ளைக்காரர்களும் பால்குடம் காவடி எடுத்து 276 படிகள் கொண்ட பத்து மலையின் மீதேறி அருள்பாலிக்கும் முருகனை வணங்கி அருள் பெறுகின்றனர்.