சென்னை வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்: மு.க.ஸ்டாலின்..

நிவர் புயலால் சென்னை நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதல் சைதாப்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அவருடன் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் உடனிருந்தார்.

பின்னர் வேளச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திர சேகர் உடனிருந்தனர்.