முதல்வரின் தாயார் மறைவுக்கு முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்…

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மு.க.ஸ்டாலின்

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த வாரம் சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார்..
. தாயாரின் மறைவையொட்டி கடந்த ஒருவார காலமாக சேலம் இல்லத்தில் இருந்த முதல்வர் பழனிசாமி நேற்றிரவு சென்னை திரும்பினார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அவரை நேரில் சந்தித்து திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் முதல்வரை சந்தித்த மு.க.ஸ்டாலின்,

அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மு.க.ஸ்டாலினுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.