கரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 38 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை : காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை சாதனை..

காரைக்குடியில் மானகிரி அருகே அமைந்துள்ள அப்பலோ ரீச் மருத்துவமனை கரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 38 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
இது குறித்து அப்பலோ ரீச் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் மற்றும் மகப்பேறியல் நிபுணர் டாக்டர் ரதி லாவண்யா கூறும் போது:

“அப்போலோ ரீச் மருத்துவமனை, காரைக்குடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 38 கர்ப்பிணி பெண்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளோம். பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இருமல், தலைவலி இருந்துவந்தது சில நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு இருந்தது மற்றும் சிலருக்கு வயிற்றுப்போக்கு இருந்தது.
நோயின் தீவிரத்தை அறிவதற்காக கர்ப்பிணிகளுக்கு இரத்த பரிசோதனைகள் எம்.ஆர்.ஐ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. நோயாளிகளுக்கு அரசின் நிலையான நெறிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவையான நோயாளிகளுக்கு ரெமிடிசிவிர் மற்றும் ஸ்டெராய்டுகள் வழங்கப்பட்டன. பெற்றெடுத்த அனைத்து சிசுக்களும் NICU இல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்களும் நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்பினார். தாய்மார்களுக்கு ஏற்படும் கர்ப்பக் காலத்துக்கு பிந்தைய கவலை மற்றும் மனச்சோர்வு ஆகிய உளவியல் பிரச்சனைகளும் உன்னிப்பாக கையாளப்பட்டது.” என மகப்பேறு மருத்துவர் மற்றும் மகப்பேறியல் நிபுணர் டாக்டர் ரதி லாவண்யா கூறினார்.

காய்ச்சல் கிளினிக்கில், 48 குழந்தைகள் கோவிட்டிற்காக பரிசோதிக்கப்பட்டனர், அதில் 9 குழந்தைகள் நோய் தீவிரம் காரணமாக அனுமதிக்கப்பட்டனர். அதற்கேற்ப அவர்கள் சிகிச்சை பெற்றனர். லேசான தொற்றால் பாதிக்கப்பட்ட மீதமுள்ள குழந்தைகளுக்கு தொலைத் தொடர்பு மூலம் சிச்சை வழங்கப்பட்டன. குழந்தைகளை பாதிக்கக்கூடிய கோவிட் மூன்றாவது அலையின் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, தேவையான குழந்தை படுக்கைகள், பணியாளர் மற்றும் செவிலியருக்கு பயிற்சி மற்றும் பல தேவையான வசதிகள் அப்போலோ ரீச் மருத்துவமனையில் இப்போதே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் மணிகண்டன் கூறினார்.

“COVID இரண்டாவது அலை தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கொண்டிருந்தது. இரண்டாவது அலையில் தினசரி லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த தொற்றுநோய் காலங்களில் போது கூட எங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேரம் பார்க்காமல் வேலை செய்தனர். இந்த நோயாளிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வர எங்கள் மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்கள் முன்முயற்சி எடுத்ததில் பெருமிதம் கொள்கிறோம் ” என்று மதுரை பிரிவின் அப்போலோ மருத்துவமனைகளின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் தெரிவித்தார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்