தீபாவளியையொட்டித் தாம்பரம் – திருநெல்வேலி பகல்நேர முன்பதிவில்லாச் சிறப்பு ரயில்…

தீபாவளியையொட்டித் தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – கோவை இடையே முன்பதிவு இல்லாத பகல்நேரச் சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவம்பர் 3, 5 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை ஒன்பதரை மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் இரவு ஒன்பதரை மணிக்குத் திருநெல்வேலியைச் சென்றடையும்.

அதேபோல் நவம்பர் 4, 7 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து காலை ஒன்பதரை மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் இரவு பத்தேகால் மணிக்குத் தாம்பரம் வந்து சேரும்.

இந்தச் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருவரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லும்.

நவம்பர் 3, 5 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை ஏழேமுக்கால் மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மாலை 6மணிக்குக் கோவை சென்றடையும்.

அதேபோல் நவம்பர் 4, 7 ஆகிய நாட்களில் பகல் 10மணிக்குக் கோவையில் புறப்படும் சிறப்பு ரயில் இரவு எட்டரை மணிக்குத் தாம்பரம் வந்துசேரும்.

இந்தச் சிறப்பு ரயில் எழும்பூர், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.