தங்கம் விலை :சவரனுக்கு ரூ.384 குறைந்து சவரன் ரூ.39,328-க்கு விற்பனை!..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.39,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலையற்ற ஏற்ற இறக்கம் நிலவுகிறது.தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.தங்கம் விலை மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 7ம் தேதி ஒரு கிராம் ரூ.5,416க்கும், சவரன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்க விலை வரலாற்றில் அதிகப்பட்சமாகும். அதன் பிறகு 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.39,776-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக சரிந்துள்ளது. சவரன் ரூ.384 குறைந்து ரூ.39,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.48 குறைந்து ரூ.4,916-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.80 குறைந்து ரூ.74.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

.