எச்.ராஜா மீது குற்றம்சாட்டிய காரைக்குடி நகர பாஜக தலைவர் முருகன் உள்பட மூவர் கட்சியிலிருந்து நீக்கம்..

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது கட்சி கொடுத்த பணத்தில் தேர்தல் செலவினங்கள் குறித்து காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் உள்பட சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்.


இந்த குற்றச்சாட்டையடுத்து தமிழக பாஜகவிலிருந்து தலைவர் முருகன் ஒப்புதலின் படி பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள கடிதத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும்,கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன், சாக்கோட்டை பாஜக தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டலத் தலைவர் பிரபு மூவரையும் கட்சி பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படதாகவும், பாஜகவினர் இவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரன்,பாலமுருகன்,பிரபு மூவரும், நாங்கள் கொடுத்த புகார் மீது எந்தவிதமான விசாரணையும் செய்யாமல் ஒருதலைபட்சமாக கட்சி முடிவெடுத்துள்ளது என்று குற்றம் சாட்டினர்.

தேர்தலின் போது 4 கோடி ரூபாய் நஷ்டம் எனக் கூறிய ராஜா இப்போது எப்படி 4 கோடி ரூபாய்க்கு வீடு கட்டுகிறார் பணம் எங்கிருந்து வந்தது எனக் கேள்வியெழுப்பினர். சட்டமன்ற தேர்தலில் பணம் தரப்பட்டது உண்மை அதனை கவனிக்க நிதி குழு அமைத்துள்ளது. எச்.ராஜா வின் மருமகன் சூரிய நாராயணன் தான் பணத்தை தேர்தலின் போது செலவு செய்யாமல் பணத்தை அபகரித்துக் கொண்டார். பொதுவாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடுவது இல்லை, ஆனால் ராஜா மருமகன் ஆர்எஸ்எஸ் இயக்க உறுப்பினர். ஆனால் அவர் செலவின நிதிக்குழுவில் இருந்து பணத்தை சுருட்டிவிட்டார் எனக் குற்றம் சாட்டினர்.


செய்தி & படங்கள்
சிங்தேவ்