ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராக தினகரனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்


டி.டி.வி தினகரனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ. சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு டி.டி.வி தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.