கலைஞர் சமாதியை நோக்கிய பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் : மு.க அழகிரி..


செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரி தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார்.

வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது, “தற்போது திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை.

நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை தெரிவிப்பேன். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள்.

பேரணிக்கு பின்னர் எனது முடிவை தெரிவிப்பேன்” என அவர் தெரிவித்தார்.


 

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து; தமிழக அரசு ஆழ்ந்து உறங்குகிறது: ராமதாஸ் கண்டனம்..

கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி..

Recent Posts