இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள்: ஐயா ஆட்சியாளர்களே: கமல் காட்டம்..

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் கொடுக்கப்படுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். கரோனா தொற்று தடுப்பூசி போடுவது பற்றி கருத்துக்கள் வெளியாவது குறித்து கமல் சாடியுள்ளார்.

மேலும் ஐயா ஆட்சியாளர்களே…தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து, அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல என கமல் தெரிவித்துள்ளார்.