காரைக்குடியில் ரூ.5 கோடி பணம் பறிமுதல்: 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை..

காரைக்குடியில் ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட கார்

காரைக்குடி அருகே பேயன்பட்டி சாலையில் அதிகநேரம் நின்ற 2 கார்களைில் போலீசார் சோதனை நடத்தியபோது இரண்டு கட்டப்பைகள் நிறைய பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது. கணக்கில் உள்ள பணமா அல்லது தொழில் சார்ந்த பணமா, கருப்புபணமா என்ற கோணத்தில் குன்றக்குடி காவல் நிலைய போலீசார் காரில் இருந்த 6 பேரை நேற்று மதியம் 3மணியளவில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வருமானவரித்துறையினருக்கு தகவல் அளித்தனர். வருமானவரித்துறை அதிகாரி மகேஸ்வரி தலைமையில் பறிமுதல் செய்த பணத்தை பெற்று அதன் விபரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக போலீசார் விசாரணையில் தாங்கள் சேலத்திலிருந்து வருவதாகவும் நிலம் வாங்க வந்ததாகவும் நாங்கள் ரியல் எஸ்டேட்காரர்கள் என்றும் பணம் அனைத்திற்கும் கணக்குள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சேலம் மற்றும் சென்னையைத் சேர்ந்த ரியல் எஸ்டேட்காரர்கள் கூட்டாக காரைக்குடியில் நிலம் வாங்க பணம் கொண்டுவந்துள்ளதா கூறியதாக தகவல்கள் தெரிவிகின்றன.

அவர்கள் காரைக்குடியில் யாரை சந்திக்க பணம் கொண்டுவந்தனர், வந்தவர்கள் விடுதியில் தங்கி வியாபாரம் செய்யாமல் ஏன் பேயன்பட்டி அருகே கார் நிறுத்தினர் என்றும், இவர்களை காரைக்குடிக்கு அழைத்த நபர் யார் அவர் உண்மையான ரியல் எஸ்டேட் நடத்துபவர்தானா.. அல்லது அவர்களை வரவழைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் நடைபெற்றதா..

போலீசாருக்கு தகவல் தெரிவித்த மர்மநபர் யார் என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஒருவரின் அழைப்பின் பேரில் வந்துள்ளனர். தற்போது அவரின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகியுள்ளார். நிலம் வாங்கி தருவதாக அவர்களை பணத்துடன் வரவழைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் 3 காரில் அதிகம் பேர் வந்ததால் கொள்ளையடிக்க திட்டமிட்ட நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். கொள்ளைத் திட்டம் நிறைவேறாமல் போகவே காவல் துறைக்கு தகவல் அளித்துளளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் வந்த 3 கார்களில் இரண்டு கார்கள் மற்றுமே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அதிலிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். 3-வது காரில் வந்தவர்கள் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்