அதிமுக வார்டு கவுன்சிலரை ஒருமையில் திட்டிய காரைக்குடி நகர்மன்ற தலைவர் …

காரைக்குடி நகர்மன்ற தலைவர் ஒருமையில் பேசி திட்டியதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர் அமுதா சண்முகம் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துதுரையை தனது 29-வது வார்டில் செய்ய வேண்டிய பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்துள்ளார் அதிமுக நகர் மன்ற உறுப்பினர் அமுதா சண்முகம். மனுவை பெற்றுக் கொண்ட நகர்மன்றத் தலைவர் அவரிடம் வீசிவிட்டு ஒருமையில் பேசியுள்ளார்.

இது குறித்து அமுதா சண்முகம் கூறியதாவது:-

எனது 29-வது வார்டுக்கு உள்பட்ட ஆலங்குடியார் வீதி, விவியார் தெருவில் சாலைகளை சீரமைக்கவும், தெரு விளக்குகளை சரிசெய்யவும் என பல்வேறு கோரிக்கைகளை மனுவாக தயாரித்து நகர் மன்றத் தலைவரை சந்தித்து மவை அளித்தேன்.மனுவை பெற்றுக் கொண்ட அவர் மனுவை என் முன்னாள் வீசிவிட்டு ஒருமையில் பேசினார்.

நகர் மன்றத் தலைவர் இது போல் ஒருமையில் பேசுவது முதன் முறையல்ல பலமுறை பேசியுள்ளார். நான் நகர் மன்றத் தலைவரை எனது தனிப்பட்ட காரியங்களுக்காக சந்திக்கவில்லை எனக்கு வாக்களித்த எனது வார்டு மக்களின் அடிப்படைத் தேவைக்காகத்தான் சந்தித்தேன்.

எந்த கோரிக்கை வைத்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாக நீங்கள் ஏன் செய்யவில்லை எனக் கூறி நிராகரித்து விடுகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கிய சாலைகள் மூன்று தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி எந்த பணிகளும் செய்வதில்லை ஆனால் 6 வணிக வளாகங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. நல்லாயிருந்த வணிக வளாகத்தை இடித்து கட்டுகிறார்கள். நகராட்சி ஒப்பந்தங்கள் வணிக வளாகங்கள் உள்பட அனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தாரிடமே கொடுக்கப்படுகிறது. சிறிய ஒப்பந்தங்கள் கூட மிகவும் தாமதமாக 6 மாதங்கள் கழித்துதான் நிறைவேற்றுகிறார் ஒப்பந்ததாரர்.
தெருவிளக்குகள் எரியவில்லை கணக்கு எடுத்தும் இதுவரை தெருவிளக்குகள் சரிசெய்யப்படவில்லை எனக்கு வாக்களித்த மக்களுக்காகத்தான் கேட்கிறேன்

நகர் மன்றத் தலைவர் எப்போதும் பெண் கவுன்சிலர்கள் என்றால் ஒருமையில் பேசுகிறார். தொடர்ந்து எனது வா்டு மக்களின் கோரிக்கைகளை நிராகரித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்