காரைக்குடியில் அதிமுக தொண்டர்களின் குமுறல்: கண்டுகொள்வாரா எடப்பாடி…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக தொண்டர்கள் நகர செயலாளார் மெய்யப்பனின் தொடர் புறக்கணிப்பால் மனம் கொதித்து உள்ளனர்.
காரைக்குடிக்கு அன்மைக்காலமாக வருகை புரியும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரையும் தொண்டர்கள் சந்திக்காதவாறு தன் சமூகம் சார்ந்தவர்களையும்,வசதியானவர்களையும் மட்டும் அழைத்து அவர்களுக்கு வரவேற்பு கொடுத்துவருகிறார் நகர செயலாளர் மெய்யப்பன். தொண்டர்களை முழுமையாக புறக்கணித்தும் வருகிறார். கட்சியின் நிர்வாகிகள் பலமுறை அவரிடம் இது குறித்து கேள்வியெழுப்பியபோது அதற்கு முறையான காரணங்கள் சொல்லாமல் தொண்டர்கள் மீது குற்றம் சாட்டிவருகிறார்.

சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன்

அன்மையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடி வந்தபோது அவரைச்சந்திக்க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காரைக்குடி வந்திருந்தார்.அவரின் வருகை குறித்து நகர செயலாளர் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர் சார்ந்த சமூக நிர்வாகிகளை வைத்து வரவேற்றுள்ளார். இது போல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா இல்லத் திருமணவிழாவிற்கு வந்த முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை வரவேற்க நிர்வாகிகள்,தொண்டர்களுக்கு முறையான அறிவிப்பு செய்யவில்லையென அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து மெய்யப்பன் மீது குற்றம்சாட்டிவருகின்றனர்.இந்நிலையில் மகளிர் அணி பெண் நிர்வாகிகள் மெய்யப்பனை தட்டிக் கேட்டுள்ளனர்.

காரைக்குடி நகர அதிமுக செயலாளர் மெய்யப்பன்

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சோழன்.பழனிச்சாமி சட்டமன்ற தேர்தலுக்குன முன்பு பாஜகவில் இணைந்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் நகர செயலாளர் மெய்யபனுக்கு எதிராக உள்ளவர்களை பாஜகவிற்கு மறைமுகமாக அழைப்பதாகவும் அவர்களுக்கு கட்சி பதவிகள் பெற்று தருவதாகவும் உறுதியளித்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட அதிமுக செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதனிடம் பலமுறை எடுத்துக் கூறியும் மெய்யப்பன் மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.

சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகி சோழன் பழனிச்சாமி

அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் தெரிவிக்க உள்ளனார். எடப்பாடி பழனிச்சாமி கவனிப்பாரா… சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பாரா என காரைக்குடி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மனவொட்டத்தை அறித்து தலைமை செயல்படுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்