காரைக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி நகர் மன்ற தலைவரிடம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் மனு..

வளர்ந்து வரும் புராதான நகரான காரைக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி காரைக்குடி நகர் மன்றத் தலைவர் சே.முத்துதுரையிடம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வெளியட்ட செய்திக் குறிப்பில்
காரைக்குடி தொழில் வணிகக் கழகம், தங்கம், வெள்ளி, வைரம், நகை வியாபாரிகள் சங்கம், அனைத்து ஜவுளி & ரெடிமேட் வர்த்தகர்கள் சங்கம் ஆகிய நிர்வாகிகள் இன்று(அக் – 03) மதியம் 12.30 மணிக்கு, நகர் மன்றத் தலைவர் திருமிகு . சே.முத்துத்துரை அவர்களைச் சந்தித்து முறையிட்ட விபரம்:

அம்மன் சன்னதி, அரு.அ.தெருவை ஒரு வழிப்பாதையாகவும், கண்ணன் பசார், செக்காலைச்சாலையில் 4 சக்கர வாகனங்கள் வரை இருபுறமும் சென்று வரவும், இப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூரில்லாமல்பண்டிகை திருவிழா காலங்களில், அனுமதிக்கப்படாத கடைகளின் அருகிலும், வாசலிலும் சாலையோர வியாபாரிகளை கடை போடாமல் இருப்பதற்கு பெருநகராட்சி மூலம் காவல் துறைக்கு அறிக்கை தருமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது.