காரைக்குடியில் ஊற்றுகள் அமைப்பு சார்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை ..

காரைக்குடி அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊற்றுகள் அமைப்பின் சார்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை இன்று தொடங்கிவைக்கப்பட்டது.
ஜூபிடர் சரவணன் மற்றும் கோவிலுார் நவீன் குமார் நினைவாக ஊற்றுகள் அமைப்பின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை காரைக்குடியில் தொடங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் காரைக்குடி தொழில்வர்த்தக சங்கத் தலைவர் சாமி.திராவிடமணி முன்னிலை வகித்தார். இராமநாதபுர மாவட்ட சரக காவல் டிஐஜி மயில்வாகனன் ஐபிஎஸ் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் காரைக்குடி பொது மருத்துவமனை மருத்துவர் டாக்டர். அருள்தாஸ் கலந்து கொண்டார். லயன் கண்ணப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவினை ஊற்றுகள் அமைப்பின் தலைவர் அரசு சோமன்,செயலாளர் செல்வராஜ் மற்றும் ஊற்றுகள் அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்.


விழாவில் ஜூபிடர்சரவணனின் தந்தை ,கோவிலுார் நவீன் குமாரின் தந்தை இருவரும் கலந்து கொண்டனர்.
ஆம்புலன்ஸ் இலவச சேவையைத் தொடங்கி வைத்த டிஐஜி மயில்வாகனன் ஐபிஎஸ் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூவரையும் மேடைக்கு அழைத்து சில அறிவுரைகளை வழங்கினார்.

ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டவுடன் காவல் துறை உங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார். எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு உதவியாக காவல் துறை செயல்படும் என்றார்.
இலவச ஆம்புலன்ஸ் வழங்கி சேவையை தொடங்கிய ஊற்றுகள் அறக்கட்டளையின் சேவைகள் அளப்பறிவை..
காரைக்குடியைச் சேர்ந்த சமூக அக்கரை கொண்ட பலர் ஒன்று கூடி உருவாங்கியதுதான் ஊற்றுகள் அறக்கட்டளை அமைப்பு. 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊற்றுகள் அறக்கட்டளை பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.


2016-ஆம் ஆண்டு சென்னை,கடலுார் பெருவெள்ளப் பாதிப்பின் போது காரைக்குடி பொதுமக்களிடம் நிவாரணப்பொருட்கள் பெற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உதவிப் பொருட்களை வழங்கி சேவை ஆற்றியது.
2017-ஆம் ஆண்டு கேரள வெள்ள நிவாரணப் பணிகள் அன்றைய சிவகங்கை மாவட்ட துணை ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையின் கீழ் கேரள-இடிக்கி மாவட்டத்தில் நிவராப்பணிகளை மேற்கொண்டது.


2018- கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்களை 23 வாகனங்களில் கொண்டு சென்று விநியோகித்து சிறப்பாக சேவையாற்றி பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்தது.
2020- அதாவது கடந்த ஆண்டு கரோனா பொது முடக்க பாதிப்பால் பாதிக்கப்பட்ட சாலையோர மக்கள்,காரைக்குடிஅரசு பொதுமருத்துமனை நோயாளிகள், மற்றும் ஏழை மக்களுக்கு சிவகங்கை முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் 40 நாட்களுக்கு மதியம்,இரவு உணவு தொடர்ந்து வழங்கி அவர்களின் பசிப்பிணி போக்கினார்கள்.
ஊற்றுகள் அறக்கட்டளை அமைப்பின் சேவைகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து உதவிக்கரம் கொடுத்து வருகின்றனர்.


தற்போது இலவச ஆம்புலன்ஸ் சேவையை காரைக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தொடர்ந்து செய்வோம் என ஊற்றுகள் அறக்கட்டைளை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்களுக்கு செய்யும் சேவை மகேசனுக்கு செய்யும் சேவையென சுவாமி விவேகானந்தர் கூறியது போல் இவர்களின் சேவை மனிதநேயத்திற்கு என்றும் தலைவணங்குவோம்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்