முக்கிய செய்திகள்

மின் விளக்குகளை அணைத்துவிட்டால் கரோனாவை வீழ்த்திவிடுவோமா?: மோடிக்கு குஷ்பு கேள்வி

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப் 5) இரவு 9 மணிக்கு வீட்டில்

மின் விளக்குகளை அணைத்து தீபம், டார்ச், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில்,

மின் விளக்குகளை அணைத்து விட்டால் நாம் கரோனா நோய்த்தொற்றை வீழ்த்திவிடுவோமா என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்க பதிவில் கூறியிப்பதாவது:

“நான் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் எதிரானவள். ஆனால் அவர் இருக்கும் பதவிக்கு எப்போதும் மரியாதை தருவேன்.

அவரை பிடித்திருக்கிறதோ இல்லையோ அவர் நமக்கு பிரதமர். அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே நீங்கள் வேறொரு நல்ல யோசனையைத் தந்திருக்கலாம்.

கரோனா நோய்த்தொற்றை வீழ்த்துவதற்கு ஒரு கண்டுபிடிப்பாக இதனை செய்வதால் (மின் விளக்குகளை அணைப்பதால்) நாம் கரோனா நோய்த்தொற்றை வீழ்த்திவிடுவோமா என்று கேள்வி எழுப்பியுள்ள குஷ்பு தனது கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து எதையும் ஏற்ற வேண்டாம். வீட்டிலேயே இருங்கள், சமூக இடைவெளிதான் இப்போது முக்கியம்.

தயவுசெய்து கேளுங்கள். இந்தியப் பிரதமரிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு திட்டம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, தினக்கூலிப் பணியாளர்களை, சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க யோசனை.

இது அறுவடை நேரம் என்பதால் விவசாயிகளுக்கு நிவாரணம். அவர்களின் அறுவடையக் கொள்முதல் செய்து அதை மக்களுக்குச் சென்று சேர்க்க உதவ வேண்டும். எதையும் செய்யாதரோது அது ஆழமாகப் பாதிக்கிறது”. என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.