முக்கிய செய்திகள்

இனத்துக்கு ஒளியானவர் அண்ணா: ஸ்டாலின் முகநூல் பதிவு

விழுப்புரம் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின்…

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் இட்டுள்ள பதிவு:

 

மொழிக்கு முதலானவர்.

 

இனத்துக்கு ஒளியானவர்.

 

நம் நாட்டுக்கே பெயர் சூட்டியவர்.

 

நமக்கு நம்மையே உணர்த்தியவர்.

 

தமிழே உயிரெனக் கொண்டு திராவிடக் கொள்கைகளை நாடாளுமன்றம் வரை உரக்க எழுப்பிய திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 110ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அவரது சிலைக்கு கழகத் தலைவர் என்ற பொறுப்புடன் முதன்முறையாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

 

இந்நன்னாளில், பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் காட்டிய வழியில் கழகத்தைக் கட்டிக்காக்கும் பணியில் உங்களில் ஒருவனாக ஓயாத உழைத்திடும் ஊக்கத்தைப் பெறுகிறேன். தமிழர்களின் அண்ணன் பேரறிஞர் பெருந்தகையின் பிறந்த நாளில் அவரை வணங்கி நம் அரசியல் பயணம் தொடர்வோம்!

M.K.Stalin’s FB Status On Anna’s Birthday